எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் – காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி!

தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கு இலங்கையின் ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் இந்த சேவையை நடத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் – கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.
இதன்போது இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது.
இதேவேளை, பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாளை அரச பாடசாலைகள் நடைபெறும்!
இன்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிட்சை!
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவரானார் இனோக்கா!
|
|