எதிர்வரும் வியாழன்முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை விடுமுறைகள் ஜூலை 18 ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
முன்பதாக இன்றுமுதல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது
இந்தத் தீர்மானம் கல்வி அமைச்சில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
புதிய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்
பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் சிறந்த தலைமைத்துவம் கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா ஆவர்களே - ஈ.பி...
பொருளாதார நெருக்கடியிலும் அதிகளவில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் - பிரிதானியாவிலிருந்து அதிக சுற்று...
|
|