குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் – ஜேவி.பி!

Monday, August 21st, 2017

மத்திய வங்கி ஊழலுடன் தொடர்புபட்ட அர்ஜுன அலோசியஸ் யாருக்கெல்லாம் பணம்கொடுத்தார்? யாருக்கெல்லாம் வீடுகள் வாங்கிக் கொடுத்தார்? யாருக்கெல்லாம் காணிகள் வாங்கிக் கொடுத்தார்? என்ற விபரங்களை ரவி கருணாநாயக்க ஜனாதிபதியிடம் கூறி இருக்கின்றார்.

இவர்கள் அனைவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் உடன்விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஜே.வி.பியின் வட மத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் தினமும் பேசப்படும் ஒரு விடயமாக ஊழல் மாறியுள்ளது. அதிலும், மத்திய வங்கி ஊழல்தான் நாட்டையே உலுக்கிக்கொண்டு இருக்கின்றது. இதில் தொடர்புபட்ட ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். அத்தோடு இந்தப் பிரச்சினை முடியவில்லை.

இன்னும் பலர் உள்ளனர்.மத்திய வங்கி ஊழலை விசாரித்து வெளியிடப்பட்ட கோப் அறிக்கையில் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள் பலர் அடிக்குறிப்பிட்டனர். அவர்களுக்கு அர்ஜுன அலோசியஸ் தலா இரண்டு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்கினார் என்ற தகவல் எமக்குக் கிடைத்துள்ளது.

அலோசியஸ் யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார்? யாருக்கெல்லாம் வீடுகள் வாங்கிக் கொடுத்தார்? யாருக்கெல்லாம் காணிகள் வாங்கிக் கொடுத்தார்? என்ற விவரங்களை ரவி கருணாநாயக்க ஜனாதிபதியிடம் கூறி இருக்கின்றார். இவர்கள் அனைவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் உடன் விசாரிக்கப்பட வேண்டும்.ஊழல், மோசடி விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ நீதிமன்றங்களுக்கும் சி.ஐ.டி. விசாரணைக்கும் ஏறி இறங்குகின்றார்.

அலோசியஸிடம் வீடு வாங்கியவர் ரவியின் மனைவிதான் என்று ரவியே கூறியுள்ளார். அப்படியென்றால் அவரது மனைவியும் இவ்வாறு விசாரிக்கப்பட வேண்டும். இன்று ரவி அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். திலக் மாரப்பன அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், திலக் மாரப்பன பெயரளவில்தான் வெளிவிவகார அமைச்சர். ரவிதான் மறைமுகமாக இருந்து கொண்டு அவரை இயக்குகின்றார். உண்மையான அமைச்சர் ரவிதான். இந்த உண்மையை நாம் விரைவில் வெளிப்படுத்துவோம் என்றார்.

Related posts: