இலவச பாடநூல்கள் அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ்!

Friday, September 11th, 2020

2021 ஆம் ஆண்டுக்கான 400 வகையான இலவச பாடநூல்களை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும், திறந்த பெறுகைக் கோரல் முறை மூலம் தெரிவுசெய்யப்பட்ட தனியார் அச்சக நிறுவனங்கள் ஊடாகவும் அச்சிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் 2021 ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் தொடர்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸினால் அமைச்சவை கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை முழு அங்கிகாரம் வழங்கியுள்ளது.

மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் விநியோகத்துக்கு 400 வகையான நூல்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளது.

இதனடிப்படையில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகை குழுவின் சிபாரிசுக்கு அமைய 106 பாடநூல் வகைகளின் 13,890,000 பிரதிகள் 1093.71 மில்லியன் ரூபாவிற்கு அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திலும்,

294 பாடநூல் வகைகள் 25,541,500 பிரதிகள் 2059.01 மில்லியன் செலவில் திறந்த பெறுகை கோரல் முறை ஊடாக தெரிவு செய்யப்பட்ட தனியார் அச்சக நிறுவனம் ஊடாகவும் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: