எதிர்வரும் மாதம் முதல் கட்டாயமாகிறது மீட்டர் முறைமை!

முச்சக்கர வண்டிகளது மீட்டர் முறைமையானது எதிர்வரும் மாதம் முதல் கட்டாயமாகிறது.
பயணிகள் போக்குவரத்தான முச்சக்கர வண்டிகளது மீட்டர் முறைமையினை கட்டாயமாக்கும் சட்டத்தினை எதிர்வரும் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து கட்டயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சாலை பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்திருந்தார்.
பயணிகள் போக்குவரத்திற்கான முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்தமான மீட்டர்களை பொருத்துவது தொடர்பில் சாரதிகளுக்கு போதுமான காலம் வழங்கப்பட்டதாகவும் குறித்த காலப்பகுதியினை மேலும் நீடிக்க முடியாதுள்ளதாகவும் மீட்டர்கள் பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளது சாரதிகளுக்கு எதிராக எதிர்வரும் மாதம் முதல் சட்ட கடுமையாக்கபப்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது மட்டுமின்றி புதிய சட்டமாக பற்றுச்சீட்டு வழங்குவதும் கடமையாக்கப்படவுள்ளது.
Related posts:
|
|