எதிர்வரும் புதனன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை !

Monday, June 24th, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை நாட்டு மக்களுக்கான விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

முன்பதாக இலங்கை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என்ற வங்குரோத்து நிலைமையை அறிவித்திருந்தது.

தற்போது இலங்கை அந்த நிலைமையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டிருப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கான விசேட சலுகைகள் பலவற்றை அறிவிக்கவுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: