எதிர்வரும் திங்களன்று ஐ.நா. அமர்வு அரம்பம் – ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நாளைமறுதினம் ஜெனிவா பயணம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே இவ்வாறு ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கள்கிழமை ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை குறித்த அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
குறித்த அறிக்கை ஏற்கனவே, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை அதற்கான பதிலளித்து உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின் த...
பாகிஸ்தான் பொருளாதார நிறுவனத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் ஒப்பந்தம் - கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோச...
பிரதமர் பங்கேற்பு – “புதிய கிராமம் - புதிய நாடு” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன...
|
|