எதிர்வரும் செவ்வாய் முதல் இலங்கை – நேபாளத்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை!

இலங்கை – நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைமுதல் கொழும்பு- கத்மாண்டுவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் என நேபாளத்துக்கான இலங்கை தூதுவர் ஹிமாலீ அருணதிலக, தனது டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.
குறித்த விமான சேவையின் ஊடாக சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் என்பதுடன் இரு நாடுகளுக்கிடையில் மக்கள் தொடர்பும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், காத்மாண்டு- கொழும்புக்கு இடையிலான வழக்கமான நேரடி விமானங்களை, அப்போதைய ரோயல் நேபால் ஏயர்லைன்ஸ் இயக்கி வந்தது.
ஆனாலும் விமானங்கள் வணிக ரீதியாக சாத்தியமில்லை என்பதனால் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிறந்தநாள் வீட்டில் உணவுண்ட 10பேர் வைத்தியசாலையில் அனுமதி- கரணவாய் கொற்றாவத்தையில் சம்பவம்!
வலி,வடக்கில் அமெக்க செனட் பிரதிநிதிகள்!
மக்களை தனித்தனியாக சந்திக்க திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் – ஈ.பி.டி.ப...
|
|