எதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் – இராணுவ தளபதி எச்சரிக்கை!
Sunday, June 20th, 2021
எதிர்வரும் காலங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படலாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
விசேடமாக எதிர்வரும் நாட்களில் சில பிரதேசங்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஒரு மாத காலமாக நாட்டை முடக்கி கொரோனா தொற்றினை ஓரளவு கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டுப்படுத்திய தொற்றினை மீண்டும் அதிகரிக்காத வகையில் மக்கள் செயற்பட வேண்டும். மக்களின் ஆதரவு மேலும் அவசியமாக உள்ளது.
எந்த ஒரு காரணத்திற்காகவும் மக்கள் ஒன்றுக்கூட வேண்டாம். பொசொன் போய தினங்களிலும் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும். அதன் பின்னர் நாட்டை மீண்டும் திறந்து அவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


