எதிர்க்கட்சி உரிமையை எம்மிடம் வழங்குங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும!

Friday, February 16th, 2018

எதிர்க்கட்சி என்ற உத்தியோகபூர்வ உரிமையைக் கூட்டு எதிரணிக்கு வழங்குமாறு சபாநாயகரிடம் கோரியுள்ளார் அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
நாங்கள் தேர்தலை எதிர்கொண்டு நாம் எமது வாக்கு வங்கியை ஒப்புவித்துக்காட்டியிருக்கின்றோம். எவரும் சவால் விடுக்க முடியாத வாக்கு வங்கியை உறுதிப்படுத்தியிருக்கின்றோம். அரசுக்கு எதிராக வாக்குகளைச் சேகரித்துள்ளோம்.
இதனால் சபாநாயகரே அடுத்த வாரம் நாங்கள் உங்களைச் சந்திக்க வருகிறோம். எதிர்க்கட்சியின் அதிகாரபூர்வ உரிமையை எமக்குப் பெற்றுக் கொடுங்கள். ஜனநாயகத்துக்குத் தலைவணங்குங்கள்.
இந்த அரசு மூன்று பாரதூரமான ஜனநாயக மீறல்களை மேற்கொண்டது. ஜனவரி 9 ஆம் திகதி சட்ட ரீதியான அரசை வீட்டுக்கு அனுப்பியது.
தேர்தலில் தோல்வியடைந்த 12 பேரை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அமரவைத்து, நாடாளுமன்றத்தில் இருப்பவர்களில் 20 வீதமானவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். அமைச்சரவையிலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட 10 வீதமானவர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் புண்ணியத்தில் அமைச்சர்களானவர்கள். உலகில் எங்கு இப்படி இருக்கின்றது என்றார்.

Related posts: