எதிரணி மற்றும் மக்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நாடாளுமன்றில் அமைச்சர்களது பிரசன்னம் கட்டாயம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்து!

எதிரணியினரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு அமைச்சர்கள் கட்டாயம் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்க வேண்டுமென சகல அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது –
எதிர்க்கட்சிகளினதும் மக்களினதும் பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்காக அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டுமெனவும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபை முதல்வர் அன்றி குறிப்பிட்ட அமைச்சர்களே பதில் வழங்க வேண்டுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக ஆளும் தரப்பு செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|