எட்கா உடன்படிக்கை தொடர்பில் இலங்கை – இந்தியா இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்?
Sunday, September 24th, 2023
இந்தியா மற்றும் இலங்கை இடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எட்கா உடன்படிக்கை தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இதுவரை 11 சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியாவின் பிரிதிநிதிகள் குழு எட்கா உடன்படிக்கை தொடர்பில் கடந்த 19ஆம் திகதி மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர் இந்தியாவுடனான புதிய உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.
அதன் தொடர்ச்சியாகவே எட்கா உடன்படிக்கை தொடர்பிலான மெய்நிகர் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம்!
எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வரும...
எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் - மூன்று கொவிட் தடுப்பூசிகளின் செ...
|
|
|


