எச்சரிக்கை! – வருகிறது இலங்கைக்க அபத்து!!

அந்தமான் தீவுக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து கிழக்கு பகுதியின் 1350 கிலோ மீற்றர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளது.இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மூன்று நாட்களில் தாழமுக்கம் மேல் திசையை நோக்கி பயணித்து வங்காள விரிகுடா கடல் பிரதேசம் ஊடாக இந்தியாவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இலங்கைக்கு நாளை பாதிப்பு ஏற்படும் எனவும், இது தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்படுமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வட பகுதிக்கான பொருளாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் விக்னேஷ் குலரட...
கொவிட் பரவலின் தீவிரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே டெல்டா வைரஸ் பரவ முக்கிய காரணம்!
டெங்கு நோய் தொடர்பில் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|