பசுமை அமைப்புக்கு முன்னுரிமை  !

Monday, April 3rd, 2017

இனிவரும் காலங்களில் அரச அலுவலகங்களுக்காக கட்டடங்களை கொள்வனவு செய்யும்போது அல்லது வாடகைக்கு பெறப்படும்போது அவற்றின் பசுமை அமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வரும் திரசர லங்கா (நிலைபேறான இலங்கை) அபிவிருத்தி கண்காட்சியின் ஒரு அங்கமாக நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பேராசிரியர் கிரிசான் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், பொதுவாக சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத பசுமை அமைப்பு குறித்து 1 தொடக்கம் ஐந்து வரையான மதிப்பீட்டுப் புள்ளிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இவற்றில் இரண்டு தசம் ஐந்து மதிப்பீட்டுப் புள்ளிகளுக்கு அதிகமாக பெறும் கட்டடங்களே இனிவரும் காலங்களில் அரச அலுவலகங்களாக பயன்படுத்தப்படும்.

சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், குறைந்தளவு இயற்கை வளங்களை பயன்படுத்தி கட்டடங்கள் நிர்மாணிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பேராசிரியர் ரணசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts: