எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட இழப்பிற்கான நட்டஈட்டை பெற சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற தீர்மானம் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினால் நட்டஈடு பெறும் நடவடிக்கைகளுக்காக சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நீதியமைச்சு தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துளளார்.
குறித்த கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதற்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவிலும் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
முன்பதாக கடந்த மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் தீப்பற்றலுக்குள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலினால் மேற்கு கடல்வளம் பாதிக்கப்பட்டதுடன் மீனவர்களும் இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.
Related posts:
புதிய முத்திரைகள் வெளியீடு -தபால் திணைக்களம் !
நாட்டின் ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 27.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு !
யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக .கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்பு!
|
|