எக்சிம் வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கை – சீன வங்கிக்கு செலுத்தப்படவுள்ள சுமார் 4.2 பில்லியன் டொலர்களும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவிப்பு!

சீனா எக்சிம் வங்கியும் இலங்கையும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடனை மறுசீரமைப்பதற்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முக்கிய நிபந்தனைகள் தொடர்பாக பொருத்தமான உடன்பாடு எட்டப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த உடன்படிக்கையின் கீழ் சீன வங்கிக்கு செலுத்தப்படவுள்ள கடனானது சுமார் 4.2 பில்லியன் டொலர்களும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது இலங்கையின் நீண்ட கால கடன் நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது
000
Related posts:
வெளிநாட்டவர்கள் விரும்பி பருகும் தேனீரை அன்றும் இன்றும் வழங்குபவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் - அமை...
பல்கலைச் சம்பவத்தை இனவாதமாக்கவேண்டாம் - பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண!
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தனியார் வங்கிகளுடன் உடன்படிக்கை!
|
|