ஊழியர் சேமலாப நிதியத்தினை பலப்படுத்த புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் –  ஜனாதிபதி!

Sunday, December 3rd, 2017

உழைக்கும் மக்களின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட பாரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தினை பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எண்பத்தைந்து இலட்சம் அளவிலான அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களுள் சுமார் இருபத்தாறு இலட்சம் பேர் மாத்திரமே தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குகின்றனர். கட்டாயமாக பங்களிப்பு வழங்க வேண்டிய மேலும் பத்து இலட்சம் பேர் அளவில் காணப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , அவர்கள் அனைவரையும் பங்களிப்பு வழங்கச் செய்வதற்காக புதியதாக நியமனம் பெற்றவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்  தலைமையில் ல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநர்டு மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: