முடக்க நிலை நீக்கப்பட்டாலும் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் – இராணுவ தளபதி அறிவிப்பு!

Friday, June 11th, 2021

கடுமையான சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை பயண தடையை நீக்கிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா நாட்டை திறந்தாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயண தடை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின்போதே இந்த தீர்மானித்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டை மீண்டும் திறப்பதற்காக அனைத்து பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் சுகாதார அமைச்சு மற்றும் பொலிசாரால் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி  அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாக வைத்தே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மதுபானசாலைகளை தொடர்ந்தும் திறக்காதிருப்பதற்கு தீர்மானிக்க எதிர்பார்த்துள்ளதுடன், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கவும் எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானங்கள் குறித்து இறுதி முடிவு இதுவரை எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இன்றையதினம் இறுதித் தீர்மானத்தை எட்ட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 14 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: