ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு!
Saturday, August 6th, 2016
பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் 24 மணித்தியாலயங்களுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மோஹன் லால் கிரேரோ தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்று, அவர்களை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் தொடர்ந்து 11 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் மகளிர் ஜனநாயக அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு!
அவசரகாலச் சட்டம் காலாவதியானது ?
கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவை செய்வதே நமது இலக்கு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழ...
|
|
|


