ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகும்’ – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவிப்பு!
Sunday, August 27th, 2023
ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகுமென நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் சட்டம் தொடர்பான பல விதிமுறைகள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அதனால் தான் இரண்டு மாதங்கள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு புதிய சட்டத்தின் அதிகாரங்களுக்கு அமைய செயற்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு : பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள்!
மின்சார சபை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
நுண்கடன்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!
|
|
|


