ஊர்காவற்றுறை பால கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே ஜெகன் !

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கண்ணகி பாலம் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பாலத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் குறித்த பாலப் புனரமைப்பை மேற்கொள்வதற்கான முயற்சிகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அப்போதைய வடமாகாண ஆளுனர் சந்திரசிறியின் ஊடாக மேற்கொண்டு அதற்கான அனுமதியையும் நிதி ஒதுக்கீட்டையும் பெற்றிருந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக குறித்த வேலைத்திட்டம் தடைப்பட்டிருந்தது.
இருந்தும் தற்போதைய அரசுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கொண்டுள்ள இணக்க அரசியல் காரணமாக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பாலக்கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியை பெற்றுக்கொடுத்திருந்தார். டக்ளஸ் தேவானந்தாவின் விடாமுயற்சி காரணமாக குறித்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பால புனரமைப்புக்காக 605 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|