ஊர்காவற்றுறை கர்பிணிப்பெண் ஹம்சிகா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்!
Tuesday, March 15th, 2022
ஊர்காவற்றுறை கர்பிணிப்பெண் ஹம்சிகா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மன்றில் CID யினர் மன்றில் முன்னிலையாகி மனுத் தாக்கல் செய்தனர். இதன் போது தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த நபரே கர்பிணிப் பெண் கொலையின் முதலாவது பிரதான சந்தேகநபர் ஆவார்.
ஆகவே கொலை இடம்பெற்ற இடத்தில் மேலதிக விசாரணையை மேற்கொள்ளவும், கொள்ளையிட்ட நகைகள் விற்பனை செய்த நகைக்கடைக்கு சந்தேக நபரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு கோரப்பட்டது.
இவ் மனுவை ஏற்றுக் கொண்ட நீதவான் எதிர்வரும் 28ம் திகதியன்று சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


