ஊர்காவற்றுறையில் விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Wednesday, September 19th, 2018
ஊர்காவற்றுறை பிரதேசத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விளையாட்டுப் பொருட்கள் வழங்கிவைத்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இளைஞர் விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகம் ஆகியவற்றுக்கே குறித்த விளையாட்டுப் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன
ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் அவர்களினால் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்தில் வைத்து குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
எதிர்கால பயணங்கள் டிஜிட்டல் மயமானதாக இருக்க வேண்டும் - அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!
யாழில் ரயில் விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
மகிந்தவை விருப்பத்துடன் பதவி நீக்கம் செய்யவில்லை - மார்ச் மாதத்தின் பின்னர் எதிர்பார்ப்பு நிறைவேற்றப...
|
|
|


