ஊரடங்கு நீடிப்பு தொடர்பில் நாளை தீர்கமான முடிவு – ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது கொரோனா ஒழிப்பு செயலணி !

நாடு முழுவதும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளை 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொரோனா தடுப்புக்கான செயலணி நாளை கூடவுள்ளது.
இந்த கூட்டத்தில் கடந்த வார அறிக்கைகளை ஆராய்ந்து, நாளையதினம் தொடர்ந்தும் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் எட்டப்படும் எனவும் சுகாதார தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புங்குடுதீவு இறுப்பிட்டி கிராமத்தின் அபிவிருத்திக்காக முழுமையாகப் பாடுபடுவோம் - வேலணை பிரதேச தவிசாள...
பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் விவகாரம்: இன்றுமுதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
புங்குடுதீவுப் பெண்ணுடன் பேருந்தில் பயணித்தோர் அச்சமின்றி விபரங்களை தாருங்கள் - யாழ்.அரச அதிபர் அவ...
|
|