ஊரடங்கு தொடர்பில் இன்று மாலைக்குள் தீர்மானிக்கப்படும் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Friday, September 3rd, 2021
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? அல்லது வேண்டாமா என்ற முடிவு இன்று (03) மாலைக்குள் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனாவை ஒழிக்கும் தேசிய செயலணி இன்று ஜனாதிபதி தலைமையில் கூடி உண்மை நிலையை ஆராயும். பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா பரவலை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் 18 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த தனிமைப்படுத்தல் உத்தரவு 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் - அரசை எச்சரிக்கும் ஞானசார தேரர...
இந்திய சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் !
மின்சார கட்டணம் குறைப்பு - உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உ...
|
|
|


