பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – இருவர் படுகாயம்!

Tuesday, March 19th, 2019

கட்டான – கிம்புலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனிதை உரிமை பேரவைக்கு கிடையாது - கல்வ...
அரசியல் நிபந்தனைகள் எதவும் இன்றி இலங்கைக்கு ஆதரவு - சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஜனாதிபதி ரணிலிடம் தெரி...
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்திற்காக அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மார்ச...