ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்து 326 பேர் கைது : 15 ஆயிரத்து 490 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன – பொலிஸ் ஊடகப்பிரிவு!

Sunday, May 17th, 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 56 ஆயிரத்து 326 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினரின் ஆலோசனையின் அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் சில தளர்வுகளுடன் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருந்த இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த 56 ஆயிரத்து 326 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நேற்று முன்னிரவுமுதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்ட காலத்தில் மாத்திரம் 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 274 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15 ஆயிரத்து 490 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளாளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: