முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாடு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!

Sunday, June 25th, 2017

முச்சக்கரவண்டிகளின் வேக கட்டுப்பாடு தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முச்சக்கரவண்டிகளின் வேக கட்டுப்பாடு மணித்தியாளத்திற்கு 40 கிலோமீற்றருக்கு மட்டுப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். சாரதி அனுமதி பத்திரங்கள் பெறும் போது ஒருநாள் பயிற்சிகள் வழங்குவது தொடர்பிலும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, முச்சகரவண்டிகளுக்கான சாரதி அனுமதி பத்திரம் 35 வயதுக்கும் அதிகமானவர்களுக்கே வழங்கப்படவுள்ளதாகவும் சிசிர கோதாகொட சுட்டிக்காட்டினார். இதேவேளை,பாதுகாப்பு தலைகவசம் தொடர்பிலான தரம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் திருத்தப்பட்டு அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் அவர் தெரிவித்துள்ளார்

பதுளையில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்தின் 17வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்வீதி விபத்துக்களில் மூன்றுக்கு ஒரு மரணம் உந்துருளி விபத்தினால் ஏற்படுகின்றதுஇதனால் பலியாகுபவர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்

இந்த நிலையில் பாதுகாப்பான தலைகவசம் இருக்குமானால் அந்த உயிரிழப்பை தவிர்க்க முடியும் அந்த வகையில் பாதுகாப்பான தலைகவசம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு அடுத்த வாரம் அளவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்

Related posts:


கோரிக்கைகளுக்கு தீர்வு கிடையாதுவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை – பல்கலை. கல்விசாரா ஊழியர்கள்
முதலீட்டுத் துறையில் வடமாகாணம் மிகவும் முக்கியமானதொரு பிராந்தியம்:அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்!
மீளாய்வு என்ற போர்வையில் ஏற்கனவே மக்கள் விருப்புகளின்றி தெரிவு செய்யப்பட்ட திட்டங்கள் உறுதிப்படுத்து...