ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து – சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவிப்பு!
Sunday, December 4th, 2022
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு ‘திரிபோஷ’ வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமைச்சு நடத்திய ஆய்வில், நாடு முழுவதும் 20,000 முதல் 30,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்தகைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரச பல்கலைக்கழகமாக மாறுகின்றது ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
டெல்டாவால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் - மருத்துவர் அசேல குணவர்தன!
1000 விகாரை கட்ட வந்தவவரை குதிரையில் ஏற்றி சாமரம் வீசிய கூட்டம் இன்று பறாளை தொடர்பில் கூச்சலிடுவது வ...
|
|
|


