ஊடக சுதந்திரம் தொடர்பில் இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி!

Sunday, September 30th, 2018

ஊடக சுதந்திரம் தொடர்பில் இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நோர்வே தெரிவித்துள்ளது.

ஊடக சுதந்திரம் மற்றும் சமூக பொறுப்புணர்வு தொடர்பான இருபதாவது வருட கொழும்பு பிரகடனம் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்வில் அவுஸ்திரேலியா பங்களாதேஷ், கனடா, சீனா, ஜேர்மனி, இந்தியா, நோர்வே, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய இராச்சியம் முதலான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கவுஸ்டட் சீதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரகடனத்தின் அடிப்படையிலேயே இலங்கை பத்திரிகை பேரவை கடந்த 2003 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. அண்மைக் காலத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவில் ஊடக சுதந்திரத்திற்காக பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் நோர்வே தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: