ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் விரைவில் அறிமுகம்

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செய்தி மூலங்களை அறிவிக்க வேண்டும் என்ற வகையில் சட்டமொன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். தகவல்களை மூடி மறைத்து அரசாங்கத்தின் நன்மதிப்பினை தக்க வைத்துக் கொள்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டமை ஜனநாயக விரோத செயற்பாடு எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
Related posts:
நிவாரண உதவிகளுக்கு 22.7 மில்லியன் டொலர்கள் தேவை!
யாழ்ப்பாணம் நோக்கி வந்த புகையிரதம் தீப்பற்றியது!
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரைய...
|
|