ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு – அரசாங்க தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம்!

Wednesday, December 27th, 2017

நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் செயற்படும்போது ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க அரசாங்க தகவல் திணைக்களம் எதிர்பார்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் ஊடகவியலாளருக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்த செயலமர்வில் உரையாற்றுகையிலேயே அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு விடயங்களை குறிப்பிட்டார்.

இந்த செயலமர்வு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தனவின் வழிக்காட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது. இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தல் 3 விடயங்களில் முக்கியமானதாக அமைந்துள்ளது. ஒன்று 19ஆவது அரசியல் யாப்பின் கீழ் இடம் பெறும் முதலாவது தேர்தலாகும்.

இரண்டாவது சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் நடைபெறும் தேரர்தலாகும். மூன்றாவது பெண்களின் அங்கத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் தேர்தலாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர் ,வேட்பாளர் மத்தியில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளமை குறித்து சுட்டிகாட்டினார்.

Related posts: