உழைப்பாளர் தினம் நாளை – நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு – 3,500 காவல்துறையினர் கடமையில் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
Sunday, April 30th, 2023
நாளை (1) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில் கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெறும் மே தினப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3,500 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை!
இலவசக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை விடுங்கள் - முன்னாள் கல்வி அமைச்சர் வலியுறுத்து!
வடக்கில் புதிய வகை நுளம்பு - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
|
|
|


