உள்ளூர் பாடசாலை புத்தகப் பை – காலணி விலையை குறைக்க விற்பனையாளர்கள் இணக்கம்!

Wednesday, April 26th, 2023

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை பைகள் மற்றும் பாடசாலை காலணிகளின் விலைகளை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நிதியமைச்சில் நேற்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர்கள் இந்த தீர்மானத்தை அறிவித்தனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ள பொருட்களின் விலைகள், ரூபாவின் பெறுமதி அதிகரித்த போதும் மீண்டும் குறைக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், மேற்கூறிய பொருட்களின் விலை குறைக்கப்படவில்லையாயின், தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் பல இன்னல்களை எதிர்கொள்வதால் அரசாங்கம் மாற்று வழிகளுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் உற்பத்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை குறைந்த விலையில் சந்தைக்கு வழங்குமாறும் சியம்பலாபிட்டிய கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, உள்ளூர் பாடசாலை பைகள் மற்றும் பாடசாலை காலணிகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளளமைஅ குறிப்பிடத்தக்கது

Related posts: