உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு!
Wednesday, December 20th, 2017
248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் கட்டுப்பணங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறும் என தேர்ல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 497 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களால் அவற்றில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசியாவில் வேகமாக பரவும் சிகா வைரஸ்!
அச்சமின்றிப் பரீட்சைகளில் தோற்றுங்கள் – யாழ் மாவட்ட மாணவர்களிடம் மாவட்டச் செயலர் கோரிக்கை!
மின் கட்டண உயர்வு - தரவுகள் மற்றும் உண்மைகளை நாளைய தினத்திற்குள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழ...
|
|
|


