உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதிலுள்ள தடைகள் என்ன ? – விளக்கம் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெப்ரல் அமைப்பு கடிதம்!

Tuesday, November 15th, 2022

எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு  முன்னதாக  உள்ளூராட்சி மன்றத்  தேர்தலை நடத்துவதற்கு ஏதேனும் தடைகள் காணப்படுகின்றனவா? அவ்வாறு தடைகள் காணப்படுமாயின், அவை எவை என்பன குறித்து விளக்கம் அளிக்குமாறு  பெப்ரல்  அமைப்பினர்  தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமாக கேள்வியொன்றை முன்வைத்துள்ளனர். 

அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்திக்கொண்ட இறையாண்மையை பலத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு மக்களுக்கு உள்ள உரிமையை பாதுகாப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதன்மையான பொறுப்பாகும் எனவும் பெப்ரல் அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இறையாண்மையை மதித்து மக்கள் பலத்தை பாதுகாத்து உரிய காலத்தில்  உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டியது, அரசியலமைப்பின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும் எனவும் பெப்ரல் அமைப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: