உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது – தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

Thursday, January 26th, 2023

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து நேற்று (25) இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியிடம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆணைக்குழுவின் செயல்பாடுகளுக்கு மூன்று உறுப்பினர்கள் போதுமானவர்கள் என்றும், ஒருவரின் பதவி விலகலால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்டாது என அரசியலமைப்பின் உறுப்புரைகளை மேற்கோள்காட்டி மஹிந்த தேசப்பிரிய பேஸ்புக் பதிவொன்றில் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் சரத்துக்கமைய, மேற்கோள்காட்டி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரம் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது என்றார்.

“தலைவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கலாம்” அவர்களின் பெரும்பான்மை வாக்குகளுக்கமைய தீர்மானம் நிறைவேறும் என்று அவர் கூறினார்.

அத்துடன், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்த போதிலும், ஆணைக்குழுவிற்குச் செயற்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அரசியலமைப்பின் சரத்தை மேற்கோள் காட்டி அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாள்களில் காலை வேளைகளில் அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்...
வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி - காணிகள் பகிர்ந்தளிப்பு - அமைச்சர் டக்ளஸ் நடவட...
காஸாவில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் - கவனம் செலுத்த...

உலக அமைதி வேண்டி திருநெல்வேலி பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீருத்ர ஏகாதசனி மந்திரப்  ப...
பிரதமர் பதவி என்பது அரசியலின் ஒரு சிறிய பகுதி - கதைகளை உருவாக்கும் நோயாளிகளுக்கு மத்தியில் நான் ஆரோக...
வாழைப்பழங்களின் முதலாவது தொகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்ப...