உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!
Monday, July 24th, 2023
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
உள்ளூராட்சி அமைப்புகளில் தற்போது 12,000 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. அமைச்சரவையின் அங்கீகாரத்தை அடுத்து தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக ஜானக வக்கும்புர கூறியுள்ளார்.
தற்போது உள்ளூராட்சி அமைப்புகளில் தற்காலிக பணியாளர்கள், மாற்று பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 10,000 பேர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தொல் திருமாளவன், வேல்முருகனைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!
ஜனாதிபதி ஜப்பானுக்கு பயணம்!
புராதனச் சின்னங்கள் மதங்களுக்குரியவை அல்ல - அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அறிவுறுத்து!
|
|
|


