உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பிலான அறிவிப்பு விரைவில் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Tuesday, March 14th, 2023
உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பில் அறிவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து உரிய திகதி அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கண்டி நிகழ்வு தொடர்பில் விசாரணை!
விவசாய அபிவிருத்திக்கு 160 வேலைத் திட்டங்கள்!
700 ரூபாவை கடந்த வெங்காயத்தின் விலை!
|
|
|


