உள்ளூராட்சி தேர்தல் – வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்!
Wednesday, December 28th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல், ஒருவார காலத்துக்கு தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் தமது அலுவலகம் இதற்கான நடவடிக்கையை எடுக்க விரும்பியபோதிலும், அது ஒரு வாரம் தாமதமாகும் என்று, தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தாமதத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
தேர்தலை நடத்துவதற்கு தமது அலுவலகம் தயாராக உள்ளது என்று கூறிய தேர்தல் ஆணைக்குழு இந்த முறை புதிய வாக்குப் பெட்டிகள் தயாரிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது
தற்போதுள்ள பெட்டிகளை பழுதுபார்த்து, அவையே பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் பேச்சாளர் ஒருவரை நியமிக்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
சுமார் 8,000 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சிகள், தேர்தலுக்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


