உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்படமாட்டாது – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலை குறித்து வருந்துவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Tuesday, January 17th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட மாட்டாதென விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – தனக்கு தெரிந்தவரை தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஒத்திவைக்கப்படாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலை குறித்து வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவருடன் தங்களுக்கு எந்த தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை எனவும் விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்டதக்கது.
000
Related posts:
அனுமதிப் பத்திரமின்றிச் செம்மண் ஏற்றிச் சென்றவர் கைதானார்
சோள பயிர்ச் செய்கையை மீளவும் மேற்கொள்ளுமாறு கோரிக்கை!
குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மொத்த வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல...
|
|
|


