உள்ளூராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!.

Thursday, May 16th, 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சட்டம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: