உள்ளூராட்சி தேர்தலுக்கான முன் ஆயத்தங்கள் முன்னெடுப்பு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
Wednesday, November 24th, 2021
உள்ளூராட்சி தேர்தலுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, உரிய படிவங்கள் தயாரித்தல், அலுவலர்கள் மற்றும் வாகனங்கள் கணக்கெடுப்பு நடத்துதல், வாக்குச்சாவடிகளில் குறைகளை கண்டறிந்து தேவையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட, பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையர்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்தள்ளரைம குறிப்பிடத்தக்கது.
Related posts:
சைட்டம் குறித்து வர்த்தமானி அறிவிப்புகள் வெளியாகவில்லை – கோப் குழு !
ஏ.ரி.எம். மில் பணம் எடுக்கும்போது அவதானமாயிருக்குமாறு அறிவுறுத்தல் - நிதி மோசடி தொடர்பாக விசாரணை!
நாடாளுமன்றின் செயற்பாடுகளை ஒன்லைன் முறையில் முன்னெடுக்கத் திட்டம் -பணியாளர்களின் எண்ணிக்கை வரையறுக்க...
|
|
|


