உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமனம்!

பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளராக முன்னர் செயற்பட்ட நீல் பண்டார ஹப்புஹின்ன அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் பதவிக்கான வெற்றிடம் நிலவியது. குறித்த வெற்றிடத்திற்காக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இரண்டாவது நாளாக தொடரும் தொண்டராசிரியர்களின் போராட்டம்!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச - அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இடையே உரையாடல்!
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் கொரோனா பரவல் அதிகரித்தது என தெரிவிக்க முடியாது - அமைச்சர் ப...
|
|