உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் ஊழியர்களின் வைப்பு நிதிகளுக்கு பாதகமான பாதிப்புகள் ஏற்படாது – பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, September 20th, 2023

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் ஊழியர்களின் வைப்பு நிதிகளுக்கு பாதகமான பாதிப்புகள் ஏற்படாது என்பது நடைமுறை ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மொத்த கடன் தொகை சுமார் 83 பில்லியன் டொலர்களாகும்.  இதில் வெளிநாட்டு கடன் தொகை சுமார் 41 பில்லியன் டொலராகும்.

அதனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 42 பில்லியன் டொலர் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பது குறித்தும் சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் சுமார் 26 இலட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாகவும், சுமார் ஒரு லட்சம் பேர் அதன் பயனாளிகளாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

இலங்கையில் சினோபார்ம் உற்பத்தி தொழிற்சாலையை திறக்க சீனா ஆர்வம் - பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரி...
மின்சார துண்டிப்பு தொடர்பில் நாளை தீர்மானம் - பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதி...
வற் வரி அதிகரிப்பு கொள்கை - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் - முன...