உளநலம் பாதிக்கப்பட்டவர்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தவேண்டாம் – தேர்தல் ஆணைக்குழு
Thursday, July 23rd, 2020
உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அரசியல்கட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
உளநலபாதிக்கப்பட்டவர்கள் தொந்தரவுக்குள்ளாவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உளநலம் பாதிக்கப்பட்டவர்களை தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏற்றவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு அத்தகையவர்களை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தவேண்டாம், எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் பேரணிகளில் மதுபானம் போதைப்பொருள் போன்றவற்றை விநியோகிக்க முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
அரசாங்க ஊழியர்களை எச்சரிக்கும் பொது நிர்வாக அமைச்சு!
கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது!
|
|
|


