உலக வெற்றியை அடைய மனிதன் சுயநலத்தை விட்டொழித்து நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Monday, June 17th, 2024

ஆன்மீக மற்றும் உலக வெற்றியை அடையஇ மனிதன் சுயநலத்தை விட்டொழித்துஇ தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக இந்த தினத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ் கொண்டாட்டம்இ உலக அமைதிக்கான சிறந்த செய்தியையும் தரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: