உலக வங்கியின் முக்கியஸ்தர் நாளை இலங்கை வருருகை!
Friday, February 24th, 2023
உலக வங்கியின் பிரதித் தலைவர் ஒருவர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெறப்படும் வரையில், சுகாதார சேவையை உகந்த மட்டத்தில் பேணுவதற்கு வழங்கப்பட வேண்டிய ஆதரவினை அறிந்து கொள்வதே அவரது விஜயத்தின் நோக்கமாகும் என சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார அமைப்பு வலுவூட்டல் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதித் தலைவர் மாரவில வைத்தியசாலையின் செயற்பாடுகளையும் அவதானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
70 இலட்சம் பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது சுகாதார நடைமுறைகள் - வடக்கு மாகாண சுகாதார சேவை...
பண்பாடுகளைப் பேண வேண்டிய கடமை இருபாலருக்கும் பொதுவானது - வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ...
|
|
|


