உலக வங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழ் – பொன்னாலை வீதி புனரமைப்பு!
Wednesday, October 26th, 2016
உலக வங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழ் – பொன்னாலை வீதியில் 12.8 கிலோ மீற்றர் நீளமான பகுதி விரைவில் பல மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சு இதற்கான நடவடிக்கையயை யாழ்.நகர அபிவிருத்தியின் ஓர் அங்கமாக இதனை முன்னெடுத்துள்ளது. மேற்படி வீதியின் மீள்புனரமைப்பு குறித்த விளக்கம் யாழ்.அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இதன் புனரமைப்பினை மேற்கொள்ளும் திட்டக் கழுத் தலைவர் பொறியியலாளர் ஆர்.எம்.அமரசேகர மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ள ஏபி – 21 வீதியின் வரைபட விளக்கத்தினை வழங்கியதுடன் 2017இல் இத்திட்டம் முழுமை பெறும் என்றார்.

Related posts:
வெளிநாட்டில் பிள்ளைகள் : தாயின் விபரீத முடிவு !
வைத்திய அலுவலகங்களில் வாகனமின்மையே சேவையின் சிக்கலுக்கு காரணம் -வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் ச...
உள்ளூராட்சித் தேர்தல் - வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படு...
|
|
|


