உலக சந்தையில் யூரியா உரம் உட்பட அனைத்து உரங்களின் விலையும் உயரும் அபாயம் – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை!
Sunday, October 22nd, 2023
உக்ரைன் – ரஷ்யா யுத்தம், இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் என யுத்தங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் உலக சந்தையில் யூரியா உரம் உட்பட அனைத்து உரங்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை உரத்துக்கான கேள்வி கோரலை மூன்று மாதங்களாக தாமதப்படுத்திய இரண்டு அதிகாரிகளை விவசாய அமைச்சில் இருந்து உடனடியாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பருவத்தில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரத்தை கூடிய விரைவில் கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவையின் அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவும், விவசாய அமைச்சின் உரம் தொடர்பான அதிகாரிகளுக்கு உரிய கேள்வி கோரலை அழைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் அமைச்சரவை ஒப்புதல் அளித்து மூன்று மாதங்கள் கடந்தும், அதை கையாளும் இரண்டு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் யூரியா கேள்வி கோருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


